விஷால் பதவி விலக வேண்டும் : அதிருப்தி தயாரிப்பாளர்கள் - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 14, 2018

விஷால் பதவி விலக வேண்டும் : அதிருப்தி தயாரிப்பாளர்கள்

[ad_1]


விஷால் பதவி விலக வேண்டும் : அதிருப்தி தயாரிப்பாளர்கள்



13 மே, 2018 - 15:42 IST






எழுத்தின் அளவு:






Vishal-shouldProducer-council-president-says-producers


நடிகர் சங்க பொதுச் செயலாளராக இருக்கும் நடிகர் விஷால், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருக்கிறார். அவர் பொறுப்பிற்கு வந்த பிறகு அவரும், சங்கத்தில் இருக்கும் மற்ற நிர்வாகிகளும் பல அதிரடியான முடிவுகளை எடுத்து வருகின்றனர். இது ஒரு சாரருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் பதவி விலக வேண்டும் என தயாரிப்பாளர்கள் சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இது தொடர்பாக டி.ராஜந்தர், ராதாரவி, கே.ராஜன் உள்ளிட்டவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் பேசும்போது....

தேர்தலின் போது விஷால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்துடன் அவர் டீல் பேசியிருக்கிறார். கொடுத்த வாக்குறுதியை மீறி தனது இரும்புத்திரை படத்தை அதிகப்படியான தியேட்டர்களில் ரிலீஸ் செய்துள்ளார். 45 நாட்களாக தமிழ் சினிமாவில் ஸ்டிரைக் நடந்தது. இதனால் எந்த பலனும் கிடைக்கவில்லை, தனது படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் மட்டுமே இருந்திருக்கிறார்.

தில்லு முல்லு செய்யும் தயாரிப்பாளர்கள் இந்த சங்க அமைப்பு தேவையா. முறையற்ற நிர்வாகிகளை நீக்கிவிட்டு தேர்தல் அறிவித்து முறையான நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த அமைப்பை மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூட்டாக பேட்டியளித்தனர்.




[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages