`நாளை முதல் திரையரங்குகள் செயல்படும்!’ - திரையரங்க உரிமையாளர்கள் அறிவிப்பு - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 14, 2018

`நாளை முதல் திரையரங்குகள் செயல்படும்!’ - திரையரங்க உரிமையாளர்கள் அறிவிப்பு

[ad_1]





தமிழகம் முழுவதும் நாளை முதல் அனைத்துத் திரையரங்குகளும் இயங்கும் என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். 






கியூப், யூ.எஃப்.ஓ. கட்டணப் பிரச்னை தீரும் வரை மார்ச் 1-ம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் வெளியாகாது எனத் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தால் முடிவெடுக்கப்பட்டு, அது நடைமுறையிலும் உள்ளது. இதனைத் தொடர்ந்து, தற்போது தமிழகத்தில் மட்டும் உள்ள 8 சதவிகித கூடுதல் கேளிக்கை வரி முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும், இருக்கைகளைக் குறைக்க அனுமதிக்கவும், லைசென்ஸ் புதுப்பிக்கும் முறையை ஒரு வருடத்திலிருந்து 3 வருடமாக உயர்த்தவும் வழிவகை செய்ய வேண்டும், திரையரங்கு பராமரிப்புக் கட்டணம் (TMC) - A/C திரையரங்குகளுக்கு 5 ரூபாய் எனவும் Non A/C திரையரங்குகளுக்கு 3 ரூபாய் எனவும் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்று அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையைத் தவிர, தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள திரையரங்குகள் மார்ச் 16-ம் தேதியிலிருந்து செயல்படாமல் இருந்துவருகின்றன.



இந்தநிலையில் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு மற்றும் கே.சி.வீரமணியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பேசிய அபிராமி ராமநாதன், 'எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர். அதனால், நாளை முதல் தமிழகம் முழுவதுமுள்ள திரையரங்குகள் செயல்படும். தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அவர்களுடன் உடன்பாடு எட்டப்படும்' என்று தெரிவித்தார். ஆனால், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஸ்ட்ரைக் முடிந்தால்தான் புதுப்படங்கள் வெளியாகும். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்





[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages