கொசு பற்றி மெசேஜ் வாங்கி கட்டிய நடிகை - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 14, 2018

கொசு பற்றி மெசேஜ் வாங்கி கட்டிய நடிகை

[ad_1]




கொசு பற்றி மெசேஜ் வாங்கி கட்டிய நடிகை
4/25/2018 12:09:56 PM

பாலிவுட் பிரபல நடிகர் அக்‌ஷய் குமார். தமிழில் ரஜினிக்கு வில்லனாக 2.0 படத்தில் நடித்துள்ளார். அக்‌ஷய் குமாரின் மனைவி டுவிங்கிள் கன்னா. இவரும் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். அக்‌ஷய், டுவிங்கிள் இருவருமே இணைய தள பக்கத்தில் மெசேஜ் பகிர்ந்து வருகின்றனர். டுவிங்கிள் சற்று அதிகமாக தனது பணியை இதில் செய்கிறார். சில சமயம் வெளிப்படையான கருத்துக்களை பகிர்கிறார். சமீபத்தில் அவர் கொசு பற்றி ஒரு கருத்தை வெளியிட்டு வாங்கிகட்டிக்கொண்டிருக்கிறார்.

சில வாரங்களுக்கு முன் விமானத்தில் கொசு தொல்லை இருப்பதாக கூறி பிரச்னை செய்த ஒரு பயணி விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பானது. இதை மையமாக வைத்து டுவிங்கிள் இணைய தள பக்கத்தில், ‘விமானங்களில் பாதுகாப்பு உடைகளை கொண்டுசெல்வதற்கு பதிலாக பயணிகள் அமரும் இருக்கைக்கு அடியில் டியூப் மூலம் கொசு மருந்தை செலுத்தி கொசுக்கடி இல்லாத பயணத்தை தர வேண்டும்.

இன்று காலை நான் விமானத்தில பயணிக்கும்போது 7 கொசுக்களை கொன்றேன். கொசு கடித்து டெங்கு காய்ச்சல் வந்து இறப்பதற்கு பதிலாக கொசு மருந்தால் சற்று மயக்கம் ஏற்பட்டால் அது பரவாயில்லை’ என குறிப்பிட்டுள்ளார். டுவிங்கிளின் இக்கருத்து சர்ச்சையாகியிருக்கிறது. அவரை வம்பிழுத்திருக்கும் சிலர், ‘உங்களது கணவர் அக்‌ஷய் குமாரிடம் சொல்லி கொசு பற்றி ஒரு படம் தயாரிக்கச் சொல்லுங்கள்’ என நக்கலடித்துள்ளனர். டுவிங்கிள் நடிப்பில் இருந்து ஒதுங்கியிருந்தாலும் தயாரிப்பாளராக உள்ளார். சமீபத்தில் கணவர் அக்‌ஷய்குமார் நடித்த ‘பேட் மேன்’ இந்தி படத்தை தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


























[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages