கூகுள் பங்குகள் மூலம் சுந்தர் பிச்சைக்கு கிடைத்தது எவ்வளவு கோடி... எப்படி? - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, May 31, 2018

கூகுள் பங்குகள் மூலம் சுந்தர் பிச்சைக்கு கிடைத்தது எவ்வளவு கோடி... எப்படி?

[ad_1]

மதுரையில் பிறந்து சென்னையில் வளர்ந்த சுந்தர் பிச்சை, கூகுளின் தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்று முழுமையாக இன்னமும் மூன்று ஆண்டுகள்கூட முடியவில்லை. ஆனால், அதற்குள் கூகுள் நிறுவனம் அபரிவிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. கூகுள் நிறுவனம் தன் ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தக் கடந்த 2015-ம் ஆண்டு 'ஆல்ஃபபெட்' என்ற பெருநிறுவனத்தைத் தொடங்கி அதனுள் கூகுள் மற்றும் அதைச் சார்ந்த இதர நிறுவனங்களையும் இணைத்துக்கொண்டது. கூகுளின் இணை நிறுவனரான லாரி பேஜ் அவர்கள் கூகுளில் தனக்கிருந்த பொறுப்புகள் அனைத்தையும் சுந்தர் பிச்சையிடம் கொடுத்துவிட்டு, 'ஆல்ஃபபெட்' பக்கம் ஒதுங்கினார். தலைமை செயல் அதிகாரி, கூகுள் தயாரிப்புகளின் மூத்த துணைத் தலைவர் போன்ற பதவிகளை சுந்தர் பிச்சை அடையும் முன், 2014-ம் ஆண்டில் அவருக்குக் கூகுளின் பங்குகளில் இருந்து 3,53,939 பங்குகள் வழங்கப்பட்டன.





அவரிடம் இந்தப் பங்குகள் வழங்கப்பட்ட பின்பு இதுவரை, 'ஆல்ஃபபெட்' நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் 90 சதவிகிதம் உயர்ந்துள்ளன. அதுமட்டுமின்றி, இந்த வருடக் காலாண்டு கணக்கு முடிவில், கூகுள் நிறுவனத்தின் பங்குகளும் சென்ற வருடத்தைக் காட்டிலும் 29 சதவிகிதம் உயர்ந்துள்ளன. இதனால், சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்ட பங்குகளின் மதிப்புகளும் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. தற்போது அவரிடம் இருக்கும் 2014-ம் ஆண்டு வழங்கப்பட்ட 3,53,939 பங்குகளின் மூலம் அவருக்கு 380 மில்லியன் டாலர்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. இது இந்திய மதிப்பில் தோராயமாக 2,524 கோடிகள். சமீபகாலத்தில், ஒரு பொதுத்துறை நிறுவனம் தன் ஊழியருக்கு வழங்கும் தொகைகளில் அதிகபட்ச தொகையாக இந்தப் பங்குத்தொகை இருக்கப்போகிறது. சிலிக்கான் வேலி நிறுவனங்கள் மத்தியில் இது நிச்சயம் ஒரு சாதனைதான்!







இதற்கு முன்னர், கடந்த 2012-ம் ஆண்டு, ஃபேஸ்புக்கின் இணை நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தன் நிறுவனப் பங்குகளின் மூலம் 2.28 பில்லியன் டாலர்களையும், 2016-ம் ஆண்டு எலான் மஸ்க் தன் டெஸ்லா நிறுவனத்தின் மூலம் 1.34 பில்லியன் டாலர்களையும் பெற்றார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், சுந்தர் பிச்சைக்கு தற்போது கிடைக்கப்போகும் தொகை 2014-ம் ஆண்டுகளின் பங்குகளுக்கு உரியதுதான். இன்னமும் 2017-ம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்ட பங்குகள் குறித்தும், அதன் தற்போதைய மதிப்பு குறித்தும் தகவல்கள் ஏதும் இல்லை. நிச்சயம், அதன் மதிப்பு இதைவிட அதிகமாகவே இருக்கும் என்று நம்பலாம். மேலும், அவர் தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்ற பிறகு, இதுவரை இரண்டு முறை இதேபோல ஒன்பது இலக்க வெகுமதிகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





இதற்கு முன்னதாக கூகுளின் தலைமை நிறுவனமான 'ஆல்ஃபபெட்' தன் மொத்த நிறுவனங்கள் சார்பாக எடுக்கப்படும் நிர்வாக முடிவுகள் குறித்து விளக்கியது. அதன்படி, கூகுள் நிறுவனத்தின் பெருவாரியான முடிவுகள் மற்றும் செயல்பாடுகளை சுந்தர் பிச்சையே பார்த்துக்கொள்வார். கூகுள், ஆல்ஃபபெட்டின் கீழ் வந்தாலும், அதை இன்றும் ஒரு தனி நிறுவனம் போலத்தான் கருதுகின்றனர். ஆல்ஃபபெட்டின் மற்ற நிறுவனங்களான தானியங்கி கார்கள் தயாரிக்கும் வேமோ (Waymo), மருத்துவம் சார்ந்த வெரிலி (Verily) உள்ளிட்ட 11 நிறுவனங்களுக்கு இல்லாத சுதந்திரம் சுந்தர் பிச்சையின் கூகுளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.



எந்த அளவுக்கு இந்தச் சுதந்திரம் என்றால், யூடியூப், விளம்பரங்கள், ஹார்ட்வேர் உள்ளிட்ட அனைத்துக் கூகுள் தயாரிப்புகளின் தனித்தனி நிதிநிலை அறிக்கைகள் சுந்தர் பிச்சைக்கு மட்டுமே அனுப்பப்படும். கூகுளின் நிறுவனர்கள் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இருவருக்குகூட இந்தத் தகவல்கள் செல்லாது. பேஜ் அவர்களின் அனுமதியின்றி, கூகுள் நிறுவனம் சார்ந்த முக்கிய முடிவுகளை சுந்தர் பிச்சை எடுக்கலாம். சூசன் வோஜ்சிக்கி (Susan Wojcicki) மற்றும் டயேன் கிரீன் (Diane Greene) போன்றோர் கூகுள் நிறுவனத்தின் யூடியூப் மற்றும் கிளவுட் போன்றவற்றிற்கு முறையே தலைமைச் செயல் அதிகாரியாகச் செயல்பட்டாலும், பேஜ் அவர்களைச் சந்தித்து பேசவும், முக்கிய முடிவுகளை எடுக்கவும் சுந்தர் பிச்சைக்கு மட்டுமே அனுமதி உண்டு. அதே சமயம், ஆல்ஃபபெட்டின் மற்ற நிறுவனங்களில் சுந்தர் பிச்சைக்கு எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. அதன் முடிவுகளில் அவர் தலையிடவும் முடியாது.



[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages