பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்தது கொல்கத்தா - கே.எல்.ராகுல் போராட்டம் வீண் - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 14, 2018

பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்தது கொல்கத்தா - கே.எல்.ராகுல் போராட்டம் வீண்

[ad_1]


கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோற்கடித்தது.



முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் குவித்தது. அந்த அணியில் சுனில் நரேன் 75, தினேஷ் கார்த்திக் 50 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் அணி தரப்பில் டையி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். 246 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில் கேஎல்.ராகுல் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தார். ஆனால், கெயில் 21 ரன்களுக்கு அவுட் ஆகி மீண்டும் அதிர்ச்சி அளித்தார். கெயிலை அடுத்து அகர்வால் 0, கருண் நாயர் 3 ரன்களில் ஆட்டமிழந்தனர். 



ஒரு புறம் விக்கெட் விழுந்தாலும் கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடி 22 பந்துகளில் அரைசதம் விளாசினார். இருப்பினும், 9 ஓவர்கள் முடிவில் 93 ரன்கள் எடுத்திருந்த போது ராகுல் 66(29) ரன்னில் ஆட்டமிழந்தார். கேஎல்.ராகுல் ஆட்டமிழந்த உடன் பஞ்சாப் அணியின் நம்பிக்கை குறைந்தது. அதுவரை நிலைத்து ஆடிய ஆரோன் பின்ச் 34(20) ஆட்டமிழந்தார்.



இறுதியில், கேப்டன் அஸ்வின் மட்டும் ரன்கள் குவிக்க போராடினார். ஆனால், 22 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் ஆட்டமிழந்தார். பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் மட்டுமே எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 12 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி தனது 6வது வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் தனது பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்தது. 



இந்தப் போட்டியில், இரு அணிகளும் சேர்த்து 459 ரன்கள் குவித்துள்ளன. ஐபிஎல் வரலாற்றில் இது இரண்டாவது அதிகபட்ச ரன் குவிப்பு ஆகும். இதற்கு முன்பு 2010 இல் சென்னை-ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 469 ரன்கள் குவித்ததே அதிக பட்சமாகும்.  



[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages