5/10/2018 10:17:20 AM
இந்தி நடிகை சோனம் கபூர், தொழில் அதிபர் ஆனந்த் அஹுஜா திருமணம் நேற்று மும்பையில் நடந்தது. இந்த விழாவில் இருகுடும்பத்தாரும் பங்கேற்றனர். ஸ்ரீதேவி மகள் ஜான்வியும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். முன்னதாக திருமண சடங்குகள் நடந்தன. சோனம் கபூர் இரண்டு கைநிறைய தங்க வளையல் அணிந்திருந்ததுடன் கொத்து கொத்தாக முத்துக்கள் கோர்த்த தங்க வளையல்களை இருகைகளில் வைத்திருந்தார். மணமகள் தன் கையில் இருக்கும் வளையல்களை மணமாகாத இன்னொரு பெண் தலைக்குமேல் வைத்து வளையல் சத்தம் எழுப்பினால் அந்த பெண்ணுக்கும் விரைவில் திருமணம் ஆகும் என்பது நம்பிக்கை.
திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஜான்வி தனியாக ஒரு இருக்கையில் அமர்ந்து சடங்குகளை ரசித்துக்கொண்டிருந்தார். திடீரென்று சோனம் கபூர், ஜான்விக்கு தெரியாமல் அவரது பின்புறமாக நடந்து வந்து வளையல் கொத்துக்களை ஜான்வி தலைக்கு மேல் வைத்து சத்தம் எழுப்பினார். முதலில் இதை உணராத ஜான்வி பிறகு சட்டென அந்த இடத்திலிருந்து எழுந்து ஓடினார்.
அவரிடம் ஓடிச் சென்று சோனம் கபூர் மன்னிப்பு கேட்டார். ஜான்வி தனது தாய் ஸ்ரீதேவி இறந்த சோகத்திலிருந்து மீண்டு படத்தில் நடித்து வருகிறார். அவர் அறிமுகமாகியிருக்கும் படம் இன்னும் வெளிவராத நிலையில் இதுபோன்ற ஒரு சடங்கில் சோனம்கபூர் அவரை இழுத்துவிட்டது ஜாலியான விஷயமாக பார்க்கப்பட்டாலும் ஜான்விக்குத்தான் அடுத்த திருமண ஏற்பாடு நடக்குமோ என்ற சந்தேகத்தை திரையுலகினர் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
[ad_2]
Source link
No comments:
Post a Comment