5/2/2018 11:56:52 AM
தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், பையா, அலெக்ஸ்பாண்டியன், வித்தகன் படங்களில் வில்லனாக நடித்தவர், பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன். 52 வயதாகும் அவர், 26 வயது மாடல் அங்கீதா கொன்வர் என்பவரை மும்பை அலிபாக் பகுதியிலுள்ள ரிசார்ட்டில் திருமணம் செய்துகொண்டார்.
சென்னையிலுள்ள நைட்கிளப்பில் அங்கீதாவைப் பார்த்தேன். என் செல்போன் நம்பரைக் கொடுத்தேன். மறுநாள் அவர் பேசினார். பிறகு நாங்கள் தினமும் பேசினோம். முதலில் நண்பர்களாக இருந்தோம்.
பிறகு காதலித்தோம். இது 4 வருட காதல். நான் அங்கீதாவை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தேன்’ என்றார் மிலிந்த் சோமன். பிரெஞ்சு நடிகை மைலீன் ஜம்பனோனியை 2009ல் விவாகரத்து செய்துவிட்ட மிலிந்த் சோமனுக்கு இப்போது 2வது திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தனது தேனிலவு புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
[ad_2]
Source link
No comments:
Post a Comment