ஜெய்ப்பூர் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த போட்டியின் போது, சிஎஸ்கே கேப்டன் தோனியின் மகள் ஜிவா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 43-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. ஜெய்ப்பூரில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி, 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. சுரேஷ் ரெய்னா 52 ரன்கள் எடுத்தார். பின்னர் 177 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி, கடைசி ஓவரில் திரில்லிங் வெற்றி பெற்றது. அந்த அணியின் ஜாஸ் பட்லர், 2 சிக்சர், 11 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்டநாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
(சுரேஷ் ரெய்னா மகள் கிரேஸியா, ஹர்பஜன் சிங் மகள் ஹினயா)
இந்தப் போட்டியின் போது சிஎஸ்கே வீரர்கள் சுரேஷ் ரெய்னா மனைவி பிரியங்கா, ஹர்பஜன் சிங் மனைவி கீதா பஸ்ரா, கேப்டன் தோனி மனைவி சாக்ஷி ஆகியோர் தங்கள் மகள்களுடன் வந்திருந்தனர். சுரேஷ் ரெய்னா மகள் கிரேஸியா, ஹர்பஜன் சிங் மகள் ஹினயா, தோனி மகள் ஜிவா ஆகியோர் போட்டி நடக்கும்போது ஒவ்வொரு விதமான ரியாக்ஷனை தந்துகொண்டிருந்தனர்.
இதில் தோனி மகள் ஜிவாவின் ரியாக்ஷன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. போட்டி நடக்கும்போது அங்கு வீரர்கள் விளையாட, இங்கு அம்மாவுடன் விளையாடிக்கொண்டிருந்தார் ஜிவா. இதை அடிக்கடி டிவியிலும் காண்பித்துக்கொண்டிருந்தனர்.
ஏற்கனவே இந்த குழந்தைகள் மூவரும் விளையாடிய வீடியோ ஒன்றை சுரேஷ் ரெய்னா வெளியிட்டிருந்தார் என்பதும் அது சமூக வலைத்தளங்களில் வைரலானதும் குறிப்பிடத்தக்கது.
[ad_2]
Source link
No comments:
Post a Comment