5/21/2018 1:48:33 PM
பிரபல நட்சத்திரங்களின் திருமணம் நடந்தால் அவர்களுக்கு ரசிகர்கள் முதல் செல்ப்ரிட்டிகள் வரை வாழ்த்து பரிமாறுவது வழக்கம். சமீபத்தில் இந்தி நடிகை சோனம்கபூர் திருமணம் மும்பையில் நடந்தது. தொழில் அதிபர் ஆனந்த் அஹுஜாவை மணந்தார். இவர்களுக்கும் வாழ்த்து குவிந்தன. அதைக்கண்டு குடும்பத்தினர் பெருமை அடைந்தனர். இந்நிலையில் கான்டம் (ஆணுறை) நிறுவனம் ஒன்று புதுமணத் தம்பதிகளுக்கு ஆபாச வாழ்த்து ஒன்றை அனுப்பியது. புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள். உங்களை நான் முழுமையாக மூடி இருக்கிறோம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப்பார்த்த சோனம், ஆனந்த் ஜாலியாக சிரித்து ரசித்தனர். ஆனால் அவர்களது குடும்பத்தினர் வாழ்த்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்து கூறுவதற்கு ஒரு வரைமுறை கிடையாதா என்று பொரிந்து தள்ளினார்கள். ஏற்கனவே கிரிக்கெட் வீரர், அனுஷ்கா சர்மா திருமணத்தின்போதும் இதேபோன்றதொரு ஆபாச வாழ்த்தை அதே நிறுவனம் அனுப்பி அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.
[ad_2]
Source link
No comments:
Post a Comment