5/16/2018 12:22:58 PM
பாலிவுட் காதல் ஜோடிகள் இணைவதும் பிரிவதும் சகஜமாகிவிட்டது. கோச்சடையான் படத்தில் நடித்த தீபிகா படுகோன் இந்தியில் பல்வேறு படங்களில் ரன்பீர் கபூருடன் இணைந்து நடித்துள்ளார். அவர்களுக்குள் காதல் மலர்ந்த நிலையில் தீபிகா தனது முதுகுப்புறத்தில் ஆர்கே என்று டாட்டூ போட்டுக்கொண்டார். ரன்பீர் கபூர் என்பதின் சுருக்கமே ஆர்கே. இந்நிலையில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதையடுத்து காதலை பிரேக் அப் செய்துகொண்டனர். தீபிகாவுக்கும் பாலிவுட் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ரன்வீர் சிங்கிற்கும் காதல் மலர்ந்தது, அதேபோல் கேத்ரின் கைப்புடன் ரன்வீர் கபூருக்கு காதல் மலர்ந்தது. இவர்களில் கேத்ரினா, ரன்வீர் கபூர் ஜோடி லிவிங் டு கெதர் பாணியில் வசித்தனர்.
வருடக்கணக்கில் நீடித்த இந்த காதலும் பிரேக்அப்பில் முடிந்தது. ஆனால் ரன்வீர்சிங், தீபிகா காதல் நீடிக்கிறது. இருவரும் அடிக்கடி டேட்டிங் செய்வதுடன், படங்களிலும் இணைந்து நடிக்கின்றனர். இருவரும் இணைந்து நடித்த பத்மாவத் படம் சில அமைப்பினரின் எதிர்ப்புக்குள்ளானபோதும் வெற்றிபெற்றது. இதில் இருவரும் எதிரும் புதிருமாக நடித்திருந்தனர். ஆனாலும் இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிட்டபோது ஜோடியாக வந்து படம் பார்த்தனர். இருவருக்கும் திருமண ஏற்பாடு நடந்துவருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தீபிகா தனது மாஜி காதலன் பெயரில் பதிவிட்ட ஆர்கே என்ற டாட்டூவை நீக்கி இருக்கிறார். கடந்த ஆண்டு கேன்ஸ் படவிழாவிற்கு வந்தபோது ஆர்கே டாட்டூ தீபிகா முதுகுப்புறத்தில் தென்பட்டது. இம்முறை அவர் பங்கேற்றபோது அந்த டாட்டூ அழிக்கப்பட்டிருந்தது. உறவுகள் நிரந்தரம் கிடையாது என்கிறபோது டாட்டூ மட்டும் எப்படி நிரந்தரமாக இருக்க முடியும். காதலும் அழகும் நிரந்தரம் கிடையாது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்று இவர்கள் உறவுபற்றி திரையுலகில் பேசப்படுகிறது.
[ad_2]
Source link
No comments:
Post a Comment