'இருட்டு அறையில் முரட்டு குத்து' பட விவகாரம்: இயக்குநர் மீரா கதிரவன் காட்டம் - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, May 10, 2018

'இருட்டு அறையில் முரட்டு குத்து' பட விவகாரம்: இயக்குநர் மீரா கதிரவன் காட்டம்

[ad_1]


'இருட்டு அறையில் முரட்டு குத்து' போன்ற படங்களை எளிதில் திரையிட அனுமதிப்பதன் பின்னால் இருக்கிற உளவியல் என்ன? என்று இயக்குநர் மீரா கதிரவன் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், வைபவி, ஷாரா ஆகியோர் நடிப்பில் உருவான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. படத்தில் ஆபாச வசனங்கள், காட்சிகள், சைகைகள் இடம் பெற்றுள்ளதால் பாரதிராஜா, விஜய் மில்டன், ஜே.சதீஷ்குமார் உள்ளிட்ட திரைத்துறையைச் சார்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநர் மீரா கதிரவன் தணிக்கைக் குழு மீதான அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட முகநூல் பதிவில், '' 'மெட்ரோ' என்றொரு படம் வந்தது. நண்பர் ஆனந்த் கிருஷ்ணா இயக்கியிருந்தார். பெரு நகரங்களில் நிகழும் சங்கிலிப் பறிப்பை (ஜெயின் ஸ்னாச்சிங்) பற்றி அக்கறையோடு பேசிய படம்.

படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் இது தியேட்டரில் வெளியாகத் தகுதியற்றது எனச் சொல்லி சான்றிதழ் தர மறுத்து தடை விதித்தார்கள். இந்தப் படம் சமூகத்துக்கு தீங்கான படமென்றும் கார்ட்டூன் படங்களை நிறையப் பார்த்து வக்கிரத்தை குறைத்துக்கொள்ளுங்கள் என்றும் இயக்குனருக்கு சென்சார் போர்டு அதிகாரி அறிவுரையும் கூறினார். இயக்குநர் கடும் போராட்டங்களுக்குப்பிறகு படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி வைத்தார். ரிவைசிங் கமிட்டியில் பார்த்தவர்கள் 'A' சான்றிதழ் அளித்து திரையிட அனுமதியளித்தார்கள். டி.விக்கான சென்சார் தராமல் இழுத்தடித்துக்கொண்டிருக்க இன்று வரை படத்தை டி.விக்கு விற்க முடியாமல் இயக்குநர் மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார்..

பல்வேறு காரணங்களைச் சொல்லி எங்களுடைய 'விழித்திரு' படத்திற்கும் மூன்று முறை சென்சார் மறுத்தார்கள். பெரிய போராட்டங்களுக்குப் பிறகே சென்சார் வாங்கினோம். ஆட்சியாளர்கள் ஒவ்வொரு முறையும் தங்களுடைய ஆட்களையே தணிக்கைக்குழுவில் அமர்த்துகிறார்கள்.

கற்பு, கலாச்சாரம், ஆச்சாரம் என்றெல்லாம் பேசுகிற தற்போதைய மத்திய புனித(?) அரசு 'இருட்டு அறையில் முரட்டு குத்து' போன்ற படங்களை எளிதில் திரையிட அனுமதிப்பதன் பின்னால் இருக்கிற உளவியல் என்ன?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார் மீரா கதிரவன்.




[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages