ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியைக் கவர்ந்த தனுஷ்
30 மே, 2018 - 15:31 IST
ஹிந்தித் திரையுலகில் ஸ்ரீதேவியைப் போலவே அவருடைய மகள் ஜான்வியும் கனவுக் கன்னியாக வருவாரா என பாலிவுட் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. ஜான்வி நாயகியாக அறிமுகமாக உள்ள 'தடக்' ஜுலை 20ம் தேதி வெளியாக உள்ளது.
படத்திற்காக பிரமோஷன் வேலைகள் ஏற்கெனவே ஆரம்பமாகி நடந்து வருகின்றன. சமீபத்தில் 'தடக்' படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் கரண் ஜோஹர், ஜான்வியை பத்திரிகை ஒன்றிற்காகப் பேட்டி எடுத்துள்ளார். அந்த போட்டியில் தன் மனம் கவர்ந்த தென்னிந்திய நடிகர் தனுஷ் என பதிலளித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார் ஜான்வி.
ஹிந்தி அல்லது தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகைகளிடம் உங்கள் மனம் கவர்ந்த நடிகர் யார் என்று கேட்டால் தமிழைப் பொறுத்தவரையில் பொதுவாக ரஜினி, கமல், அஜித், விஜய் என்றுதான் சொல்வார்கள். ஆனால், ஜான்வி அவர்களை எல்லாம் விட்டுவிட்டு தனுஷ் என சொல்லியிருப்பது வித்தியாசமான பதிலாக உள்ளது. தனுஷின் கதாபாத்திரங்களும், நடிப்பும் தன்னை மிகவும் கவர்ந்த ஒன்று என்று சொல்லியிருக்கிறார் ஜான்வி.
[ad_2]
Source link
No comments:
Post a Comment