சந்தோஷ் நாராயணனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு கிரிக்கெட் பேட் ஒன்றைப் பரிசாக அளித்துள்ளார் விஜய்.
‘அட்டகத்தி’ மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். தொடர்ந்து ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘குக்கூ’, ‘மெட்ராஸ்’, ‘36 வயதினிலே’, ‘இறுதிச்சுற்று’, ‘கபாலி’, ‘பைரவா’, ‘மெர்க்குரி’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
அவர் இசையமைப்பில் அடுத்ததாக ‘காலா’ படம் ரிலீஸாக இருக்கிறது. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ரஜினிகாந்த் நாயகனாக நடித்துள்ளார். ஈஸ்வரி ராவ், நானா படேகர், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி, அஞ்சலி பாட்டில், அருள்தாஸ், சாக்ஷி அகர்வால், மணிகண்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜூன் 7-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.
சந்தோஷ் நாராயணனுக்கு நேற்று பிறந்த நாள். எனவே, நேற்று காலையிலேயே தன் மனைவியுடன் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்துக்குச் சென்று, அவரிடம் வாழ்த்து பெற்றார். இப்படி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், கிரிக்கெட் பேட் ஒன்றைப் பரிசாக அளித்துள்ளார் விஜய். அதில், ‘சனா’ (சந்தோஷ் நாராயணனின் சுருக்கம்), ‘ஹேப்பி பர்த்டே நண்பா’ என பிரிண்ட் செய்து, ‘பிரியமுடன் விஜய்’ கையெழுத்திட்டுள்ளார் விஜய்.
இதைப் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் சந்தோஷ் நாராயணன். “விஜய் சாரிடம் இருந்து மிகச்சிறப்பான ஆச்சரியப் பரிசு கிடைத்திருக்கிறது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பேட்டில், உங்கள் கையெழுத்திட்டுத் தந்ததில் மகிழ்ச்சி. இது எனக்கு மிகச்சிறப்பான தருணம். நன்றி அண்ணா” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.
இதை மிஸ் பண்ணிடாதீங்க...
சூர்யா படத்துக்கு இசையமைக்கத் தொடங்கிய ஜீ.வி.பிரகாஷ்
“ஜெயலலிதா வேடத்தில் நான் நடிக்கவில்லை” - கீர்த்தி சுரேஷ்
மீண்டும் அதே தயாரிப்பு நிறுவனத்துக்கு கால்ஷீட் கொடுத்த அஜித்
ஆட்டோ டிரைவராக நடிக்கும் சாய் பல்லவி
விஷாலின் அடுத்த படம் ‘அயோக்யா’
[ad_2]
Source link
No comments:
Post a Comment