5/14/2018 11:49:02 AM
கோலிவுட்டில் முன்பெல்லாம் பட தொடக்க விழா என்றால் ஏதாவது ஒரு சினிமா ஸ்டுடியோவில் உள்ள பிள்ளையார் கோயிலில் பூஜை போட்டு தொடங்குவதுண்டு. பாலிவுட்டில் முற்றிலும் இது நைட் பார்ட்டியாக ஏற்பாடு செய்கின்றனர். தற்போது கோலிவுட்டிலும் ஒரு சில பட தொடக்க விழாக்கள் நைட் பார்ட்டியாகி மாறி வருகிறது. இந்தி நடிகர் சல்மான், மான் வேட்டை வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு கடந்த மாதம் சிறை சென்றார். மறுநாளே அவர் ஜாமீனில் வெளி வந்தார்.
இதையடுத்து ரேஸ் 3 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அவரிடம் பல ஸ்டார்கள் பார்ட்டி கேட்டனர். அதை மனதில் வைத்து ரேஸ் 3 பட தொடக்கவிழா பெயரில் நைட் பார்ட்டியை தடபுடலாக ஏற்பாடு செய்தார். மும்பையில் உள்ள தனது அப்பார்ட்மென்ட்டில் பார்ட்டி நடந்தது. பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் கலந்துகொண்டனர். விடிய விடிய நடந்த பார்ட்டியில் நடிகை ஜாகுலின் பெர்னாண்டஸும் பங்கேற்றார். அதிகாலை 2.45 மணி அளவில் பார்ட்டி முடிந்து காரில் தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார் ஜாகுலின்.
அப்போது அவரது கார் மீது ஆட்டோ ஒன்று மோதியது. இதில் காரின் ஹெட்லைட் உடைந்தது. சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தார் ஜாகுலின்.
இந்த சம்பவம் குறித்து அவர் கூறும்போது,’விபத்து நடந்தது உண்மைதான். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். என் கார் மீது மோதிய ஆட்டோ டிரைவர் குடிபோதையில் இருந்தார். அதனால்தான் இந்த விபத்து நடந்தது. ஆனால் இதுபற்றி இதுவரை போலீசார் வேறு எதுவும் என்னிடம் தெரிவிக்கவில்லை’ என்றார்.
[ad_2]
Source link
No comments:
Post a Comment