‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ இயக்குநரின் ‘கஜினிகாந்த்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.
‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். கெளதம் கார்த்திக் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், நிக்கி கல்ரானி ஹீரோயினாக நடித்தார். அடல்ட் காமெடிப் படமான இதற்கு, மத்திய தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் அளித்தது. கடந்த வருடம் இந்தப் படம் ரிலீஸானது.
இதைத் தொடர்ந்து, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற அடல்ட் ஹாரர் காமெடிப் படத்தை எடுத்தார் சந்தோஷ் பி ஜெயக்குமார். கெளதம் கார்த்திக்கே இந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்க, வைபவி ஷாண்டில்யா, சந்திரிகா ரவி, யாஷிகா ஆனந்த் என மூன்று ஹீரோயின்கள் நடித்தனர். இந்தப் படத்துக்கும் ‘ஏ’ சான்றிதழையே மத்திய தணிக்கை வாரியம் வழங்கியது.
இந்நிலையில், தன்னுடைய மூன்றாவது படத்தை முடித்து தணிக்கைக்கு அனுப்பினார் சந்தோஷ். ஆர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு ‘கஜினிகாந்த்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘வனமகன்’ சயீஷா ஹீரோயினாக நடிக்க, சதீஷ், கருணாகரன், காளி வெங்கட், ராஜேந்திரன், சம்பத் ராஜ், ‘ஆடுகளம்’ நரேன், உமா பத்மநாபன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தைப் பார்த்த மத்திய தணிக்கை வாரியக்குழு உறுப்பினர்கள், படத்துக்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்.
இரண்டு ‘ஏ’ சான்றிதழ் படங்களுக்குப் பிறகு, ஒரு ‘யு’ சான்றிதழ் படத்தை இயக்கியுள்ளார் சந்தோஷ் பி ஜெயக்குமார். பாலு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ க்ரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். விரைவில் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[ad_2]
Source link
No comments:
Post a Comment