உலகிலேயே கூலான கேப்டன் யார்? ஷாகித் அஃப்ரீடி பதில் - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, May 11, 2018

உலகிலேயே கூலான கேப்டன் யார்? ஷாகித் அஃப்ரீடி பதில்

[ad_1]


கேப்டன்சியில் மிகவும் நிதானத்துடனும், அமைதியுடனும் செயல்படுபவர் தோனி என்பது உலகறிந்த விஷயம், என்ன பதற்றமான சூழலிலும் அவர் கிரிக்கெட்டை அணுகும் விதம் அறிவின்பாற்பட்டதால் எளிதில் உணர்ச்சிவயப்பட மாட்டார். அவர் சிந்திக்கும் கேப்டன் என்பது பலரும் அறிந்ததே.

இந்நிலையில் கனடாவில் உள்ள டொராண்டோவில் தன் சொந்த கிரிக்கெட் கிளப்பைத் தொடங்கிய ‘பூம் பூம்’ அப்ரீடி ஒன் லைனர் பதில் அளிக்கும் கேள்விகளை எதிர்கொண்டார்.

அதில் அவரிடம் உலகிலேயே கூலஸ்ட் கேப்டன் யார் என்று கேட்கப்பட்டது, உடனே பட்டென்று அதற்கு எம்.எஸ்.தோனி என்று பதில் அளித்தார், இதனை சாஜ் சாதிக் என்ற ட்விட்டரேட்டி பகிர்ந்துள்ளார்.

அதே போல் உங்கள் பேவரைட் இந்திய கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்விக்கும் யோசிக்காமல் விராட் கோலி என்றார்.

மேலும் பாகிஸ்தானுக்கு வெற்றி பெற 5 ஓவர்களில் 75 ரன்கள் தேவை ஒரு முனையில் நீங்கள் இருக்கிறீர்கள் எதிர்முனையில் யார் ஆட வேண்டும் என்று விரும்புவீர்கள் என்ற கேள்விக்கு ‘அப்துல் ரஸாக்’ என்றார்.

கோலிக்கும் அப்ரீடிக்கும் இருக்கும் நட்புறவு ஏற்கெனவே நிறுவப்பட்ட ஒன்று. ஆனால் சமீபத்தில் ‘இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர்’ என்று கூறி பெரிய அளவுக்கு விமர்சனத்துக்கு ஆளானார் அஃப்ரீடி என்பதும் குறிப்பிடத்தக்கது.




[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages