கால் இறுதியில் சாய் பிரணீத் - தி இந்து - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, May 10, 2018

கால் இறுதியில் சாய் பிரணீத் - தி இந்து

[ad_1]


ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்களான சாய் பிரணீத், சமீர் வர்மா ஆகியோர் கால் இறுதிக்கு முன்னேறினர்.

சிட்னியில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் சாய் பிரணீத் தனது 2-வது சுற்றில் இந்தோனேஷியாவின் பான்ஜி அக மது மவுலானாவை 21-12, 21-14 என்ற நேர் செட்டில் வீழ்த்தினார். கால் இறுதியில் சாய் பிரணீத் போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இந்தோனேஷியாவின் லீக் செவுக்யியை எதிர்கொள்கிறார்.

அதேவேளையில் சமீர் வர்மா 21-16, 21-12 என்ற நேர் செட்டில் ஜப்பானின் தகுமா யூடாவை வீழ்த்தி கால் இறுதியில் கால்பதித்தார்.

இந்த சுற்றில் சமீர் வர்மா, சீனாவின் லு குவாங்சூவுடன் மோதுகிறார். ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அனு அட்ரி, சுமித் ரெட்டி ஜோடி 21-17, 21-17 என்ற நேர் செட்டில் கொரியாவின் ஹயுக் சோய், ஹயுங் ஹூன் ஜோடியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது.




[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages