நாளுக்கு நாள் வேகம் பெறுகிறார் அவரைத் தடுப்பது கடினமாக உள்ளது: நெய்மர் குறித்து டேனிலோ - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, May 31, 2018

நாளுக்கு நாள் வேகம் பெறுகிறார் அவரைத் தடுப்பது கடினமாக உள்ளது: நெய்மர் குறித்து டேனிலோ

[ad_1]


கடந்த உலகக்கோப்பைக் கால்பந்தில் ஜெர்மனியிடம் அந்த துர்சொப்பன 7-1 கோல் தோல்விக்குப் பிறகே பிரேசில் அணி பெரிய அளவில் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் அதன் நட்சத்திர வீரர் நெய்மரின் பாத நீள எலும்புகளில் காயம் ஏற்பட்டதால் தற்போது விரைவில் குணமடைந்து கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ரஷ்ய உலகக்கோப்பையின் மிகப்பெரிய கவர்ச்சிகர வீரர்களில் முதன்மையானவர் நெய்மர். வரும் ஞாயிறன்று குரேஷியாவுக்கு எதிரான நட்பு முறை கால்பந்தாட்டத்தில் நெய்மரின் வேகம், உடல்தகுதி எப்படியுள்ளது என்று தெரிந்து விடும் என்று சக வீரர் டேனிலோ தெரிவித்துள்ளார்.

ரஷ்ய உலகக்கோப்பையில் ஜூன் 17ம் தேதியன்று சுவிட்சர்லாந்து அணிக்கு எதிராக முதல் போட்டியில் ஆடுகிறது பிரேசில். பிரிவு ஈ-யில் பிரேசில், சுவிட்சர்லாந்து, கோஸ்டாரிகா, செர்பியா அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் டேனிலோ கூறியதாவது:

நான் நெய்மருடன் அடிக்கடி பேசி வருகிறேன். அதுவும் இந்த 10 நாட்களாக பயிற்சியில் அவருடன் விளையாடி அவரை எதிர்கொண்டும் ஆடி வருகிறேன்.

ஏனெனில் நான் அவருக்கு ஒவ்வொருமுறையும் சவால் ஏற்படுத்துகிறேன், ஒவ்வொரு தினமும் அவர் சிறப்பாகவும் வேகமாகவும் ஆடி வருகிறார். நாளுக்கு நாள் அவரது ஆட்டத்தில் வேகம் கூடியுள்ளது. அவரைத் தடுத்து பந்தை அவரிடமிருந்து எடுப்பது நாளுக்குநாள் கடினமாக உள்ளது.

எனவே உலகக்கோப்பைக்கு அவர் 100% தகுதியுடன் இல்லாவிட்டாலும் எதிர்பார்ப்புக்கு இணங்க அதற்கு நெருக்கமான ஒரு உடற்தகுதியில் வருவார். இவரது ஆட்டம் எங்களுக்கு முக்கியமானது.




[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages