5/11/2018 5:22:06 PM
இணைய தள டுவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலை தள பக்கங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. பாமரன் முதல் செலப்ரட்டி, உயர் பதவி வகிப்பவர்கள் பலரும் இதில் இணைந்து பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும் ஒரு சில நடிகர், நடிகைகள் இதில் ஆர்வம் காட்டாமல் விலகி நிற்க முயல்கின்றனர். அமிதாப்பச்சன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைய தள டுவிட்டர் பக்கத்தில் இணைந்தபிறகும் ரஜினிகாந்த், கமல், அனுஷ்கா போன்ற பிரபலங்கள் விலகி இருந்தனர்.
கடந்த சில வருடங்களாகத்தான் இவர்களும் இதில் இணைந்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அனுஷ்கா பெயரில் டுவிட்டர் பக்கங்கள் இருந்தாலும் அது போலி யானது என்றே கூறப்படுகிறது. அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் என குடும்பமே டுவிட்டர் பக்கத்தில் தினமும் பதிவிடும் வழக்கத்தை கொண்டிருக்கின்றனர். பல ஹீரோயின்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பயன்படுத்தி வந்தாலும் ஐஸ்வர்யாராய் இணையாமல் தவிர்த்து வந்தார்.
தற்போது அவரை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இணைக்க முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது ஒரு திரைப்பட விழாக்குழு. சர்வதேச அளவில் பேசப்படும் கேன்ஸ் பட விழா ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. அதன் நிர்வாக அமைப்பினர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணையும்படி ஐஸ்வர்யாராயிடம் வற்புறுத்தினர். ஒரு வழியாக அதற்கு ஐஸ்வர்யாவும் சம்மதித்தார். இதேபாணியில்தான் நடிகை கேத்ரினா கைபும் இன்ஸ்டாகிராமில் சேர வற்புறுத்தப்பட அதன்பிறகு அதில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
[ad_2]
Source link
No comments:
Post a Comment