`கேரள திரையுலகில் இனவாதம்!’ - கொதிக்கும் நைஜீரிய நடிகர் - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 14, 2018

`கேரள திரையுலகில் இனவாதம்!’ - கொதிக்கும் நைஜீரிய நடிகர்

[ad_1]





கருப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதால் மலையாளப் படத்தில் தனக்குக் குறைவான ஊதியம் வழங்கப்பட்டதாக நைஜீரியாவைச் சேர்ந்த நடிகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். 



 






ஹேப்பி ஹவர்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்த `சுடானி ஃப்ரம் நைஜீரியா’ என்ற படம் கடந்த பிப்ரவரி 23-ல் வெளியாகி கேரள ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.  கேரளாவில் வசித்து வரும் நைஜீரியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அங்குள்ள கால்பந்து கிளப் அணியில் இணைந்து வெற்றிகரமான வீரராக உருவெடுப்பதை மையமாக வைத்து அந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. படத்தில் வரும் நைஜீரிய இளைஞர் கதாபாத்திரத்தில் சாமுவேல் ராபின்சன் என்ற நடிகர் நடித்திருந்தார். இந்தநிலையில், கருப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதால், படத்தில் நடிக்கத் தனக்குக் குறைவான ஊதியம் அளிக்கப்பட்டதாக அவர் புகார் கூறியிருக்கிறார். 



இதுதொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள சாமுவேல் ராபின்சன், `சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் என்று கூறப்பட்டதால், குறைவான ஊதியத்திற்கு நடிக்க ஒப்புக்கொண்டேன். படம் வெளியான பின்னர்தான் தெரிந்தது, அது பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படம் என்பது. நான் கறுப்பினத்தைச் சேர்ந்தவன் என்பதால், எனக்குக் குறைவான ஊதியம் அளிக்கப்பட்டுள்ளது. கேரள மக்களையோ, கேரளத் திரையுலகத்தையோ நான் குறைகூற விரும்பவில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் எனக்கு நியாயம் கிடைக்க மக்கள் மற்றும் கேரள திரையுலகினர் உதவ வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். முதலில் தனக்கு அளிக்கப்பட்ட ஊதியத்தைக் கூற மறுத்த சாமுவேல், பின்னர், அதுகுறித்து வெளிப்படையாக அறிவித்தார். படத்தில் நடிப்பதற்கு மற்றும் பயணம் உள்ளிட்ட இதர செலவுகளுக்காகத் தனக்கு ரூ.1.80 லட்சம் மட்டுமே அளிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.  ஆனால், சாமுவேல் ராபின்சனின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஹேப்பி ஹவர்ஸ் தயாரிப்பு நிறுவனம், இருதரப்பிலும் ஒப்புக்கொண்டதற்கு இணங்க முறையாக ஒப்பந்தம் போடப்பட்டே அவருக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது. 

 



 





 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்





[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages