டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் மரபான டாஸ் முறையே தொடரும் என்று ஐசிசி கிரிக்கெட் கமிட்டி முடிவெடுத்துள்ளது.
டெஸ்ட் தொடர்களை வெல்வதற்குப் புள்ளிகள் கிடையாது. ட்ராவுக்கு அணிகளுக்குப் புள்ளிகள் கிடைக்கும். பந்தைச் சேதம் செய்தல் வீரர்களை வசைபாடுதல் போன்றவற்றுக்குத் தண்டனை கடுமையாக இருக்கும் ஆகியவற்றையும் ஐசிசி கிரிக்கெட் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது, இதில் டாஸ் முறை தொடரும் என்று உறுதியாகக் கூறப்பட்டுள்ளது.
அனில் கும்ப்ளே தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் பரிந்துரைகளை தலைமைச் செயலதிகாரிகள் மட்ட கூட்டம் பரிசீலனை செய்யும்.
டாஸ் முறை தொடர்கிறது. பிட்சைத் தங்களுக்கு ஏற்ப உள்நாட்டு அணிகள் தயார் செய்வதால் டாஸிலேயே போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்டு விடுகிறது, எனவே டாஸை ஒழித்து விட்டு பயணம் மேற்கொள்ளும் அணிக் கேப்டன் முதலில் பேட்டிங்கா, பீல்டிங்கா என்பதைத் தேர்வு செய்வார் என்பதாக மாற்றப்படும் என்ற யோசனை சீரியசாக பரிசீலிக்கப்பட்டது.
ஆனால் இந்தக் கூட்டத்தில், “டாஸ் என்பது டெஸ்ட் கிரிக்கெட்டின் உள்ளார்ந்த ஒரு அம்சம், ஆட்டத்தின் கதையாடலில் ஒரு அங்கமாகவும் டாஸ் உள்ளது” என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தகுதியில்லாத பிட்ச்களைத் தயாரிப்பதைத் தடுக்க எதிரணியினருக்கு புள்ளிகளை வழங்கி விட வேண்டும் என்ற பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இந்த தீவிர நடவடிக்கையையும் மேற்கொள்ளுமா என்பது சந்தேகமே.
[ad_2]
Source link
No comments:
Post a Comment