ஹைதராபாத் பந்துவீச்சையே கிழித்து தொங்கவிட்ட ராயுடு ! எளிதில் வென்றது சென்னை..! - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 14, 2018

ஹைதராபாத் பந்துவீச்சையே கிழித்து தொங்கவிட்ட ராயுடு ! எளிதில் வென்றது சென்னை..!

[ad_1]


சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் எளிதாக வென்றது.



சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 46-வது ஆட்டம் புனேயில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் தொடக்கவீரராக ஷிகர் தவான், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். ஹேல்ஸ் 2 ரன்னில் வெளியேற, அடுத்து கேப்டன் கேன் வில்லியம்சன் தவானுடன் கைக்கோர்த்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி நல்ல பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்ப தவறவில்லை. சென்னை பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்ட இருவரும் அரைசதம் கண்டனர். அணியின் ஸ்கோர் 16 ஓவரில் 141 ரன்னாக இருக்கும்போது தவான் 49 பந்தில் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் கேன் வில்லியம்சன் அட்டமிழக்க இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 123 ரன்கள் குவித்தது. அடுத்த வந்த வீரர்கள் கடைசிகட்டத்தில் அதிரடியை காட்ட தவறியதால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஒவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது.



அடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணிக்கு தொடக்க வீரர்களாக வாட்சன் மற்றும் ராயுடு இருவரும் களம் இறங்கினர். தொடக்க முதலே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த இருவரும் அதிரடியில் மிரட்டினர். தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய ராயுடு, பின்னர் அதிரடி காட்டினார். சிறப்பாக விளையாடி வந்த வாட்சன் 57 பந்துகளில் ஆட்டமிழந்தார். அதில் மூன்று சிக்சர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். அடுத்து வந்த ரெய்னா 2 ரன்களில் வெளியேர கேப்டன் தோனி களம் களம் கண்டார். தொடக்கமுதல் ஹைதராபாத் பந்துவீச்சாளாருக்கு சிம்ம சொப்பனமாக விளையாடிய ராயுடு 62 ரன்களில் 100 ரன்கள் எட்டினார். அதில் 7 சிக்சர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். ஐபிஎல் தொடரில் ராயிடு அடிக்கும் முதல் சதம் இதுவாகும். 19 ஒவரின் முடிவில் சென்னை அணி 180 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. 





 



[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages