தமிழ் சினிமா இருட்டு அறையில் முரட்டு குத்துகளாக வாங்கிக்கொண்டிருக்க தெலுங்கு சினிமா கொடிகட்டிப் பறக்கிறது: அஜயன் பாலா - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, May 12, 2018

தமிழ் சினிமா இருட்டு அறையில் முரட்டு குத்துகளாக வாங்கிக்கொண்டிருக்க தெலுங்கு சினிமா கொடிகட்டிப் பறக்கிறது: அஜயன் பாலா

[ad_1]


தமிழ் சினிமா இருட்டு அறையில் முரட்டு குத்துகளாக வாங்கிக்கொண்டிருக்க தெலுங்கு சினிமா 'பாகுபலி', 'அர்ஜூன் ரெட்டி', 'ரங்கஸ்தலம்', 'மகா நடி' (நடிகையர் திலகம்) என கொடிகட்டிப் பறக்கிறது என்று திரைக்கதை ஆசிரியரும், இயக்குநருமான அஜயன் பாலா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''தமிழ் சினிமா இருட்டு அறையில் முரட்டு குத்துகளாக வாங்கிக்கொண்டிருக்க தெலுங்கு சினிமா 'பாகுபலி', 'அர்ஜூன் ரெட்டி', 'ரங்கஸ்தலம்', 'மகா நடி' ( நடிகையர் திலகம்) என கொடிகட்டிப் பறக்கிறது. சமீப படங்களில் பின்புலக் கட்டமைவு (production design) சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட திரைப்படம் 'நடிகையர் திலகம்'. தற்போதைய இந்திய நடிகையருள் திபிகா படுகோன், ப்ரியங்கா சோப்ரா போன்ற ஞெகிழி நடிகையரைக் காட்டிலும் கீர்த்தி சுரேஷ் பன்மடங்கு தகுதிவாய்ந்த உலகத்தர நடிகை என்பதை நிரூபித்திருக்கிறார்

இன்னும் கொஞ்சம் திரைக்கதை மெனக்கெட்டிருந்தால் படம் இன்னும் சிறப்பான உயரங்களை தொட்டிருக்கும்'' என்று அஜயன் பாலா தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக தெலுங்கு சினிமாவில் உருவாகி வரும் படங்கள் மிகப் பெரிய கவன ஈர்ப்பை ஏற்படுத்தி வருகின்றன. தமிழில் மொழிமாற்றம் செய்யப்படாமல் கடந்த ஆண்டு சென்னை, கோவையில் சில திரையரங்குகளில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ 28 நாட்கள் ஓடி சுமார் 40 லட்சம் ரூபாய் வசூல் செய்தது. சிரஞ்சீவியின் மகன் ராம்சரண், சமந்தா நடிப்பில் மார்ச் 30-ம் தேதி வெளியான நேரடித் தெலுங்குப் படமான ‘ரங்கஸ்தலம்’ மொத்தம் 203 கோடி வசூலித்தது. சென்னையில் 15 திரையரங்குகளில் வெளியாகி 215 காட்சிகளின் முடிவில் ரூ.69 லட்சம் வசூலை ஈட்டியது. கொரட்டாலா சிவா இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த 'பரத் அனே நேனு' படம் மொத்தம் 230 கோடி வசூலித்தது. மேலும், இந்தப் படங்கள் கதைத்தன்மைக்காகவும் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நாக் அஸ்வின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'மகா நடி' படம் பாராட்டுகளைப் பெற்று வரும் நிலையில் இப்படம் குறித்து அஜயன் பாலா சிலாகித்திருப்பது கவனிக்கத்தக்கது.

 

இதை மிஸ் பண்ணாதீங்க:

முதல் பார்வை: ‘நடிகையர் திலகம்’

முதல் பார்வை: இரும்புத்திரை

முதல் பார்வை: இரவுக்கு ஆயிரம் கண்கள்

“முதன்முதலில் என் அம்மாவின் உண்மைக்கதை வெளியாகியிருக்கிறது” - ‘நடிகையர் திலகம்’ சாவித்ரி மகள் நெகிழ்ச்சி

 




[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages