வெயிலின் வெப்பத்தால் மொபைல் வெடிக்குமா... வாட்ஸ் அப் தகவல் உண்மையா? - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 14, 2018

வெயிலின் வெப்பத்தால் மொபைல் வெடிக்குமா... வாட்ஸ் அப் தகவல் உண்மையா?

[ad_1]





`வெயில் காலத்தில் மொபைலை பாக்கெட்டில் வைத்திருந்ததால் வெப்பம் தாங்காமல் வெடித்துவிட்டது. ஆகவே, வெளியில் செல்லும்போது மொபைல் டேட்டாவை ஆப் செய்து கொள்ளவும்' என்பது போன்ற பல பார்வர்டு மெசேஜ்கள் வாட்ஸ் அப் குரூப்களில் வலம் வரத் தொடங்கியிருக்கின்றன. வெயில் காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் இந்த ஃபார்வர்டு மெசேஜ்கள் பலரையும் குழப்பத்திற்குள்ளாக்கியிருக்கிறது. வெப்பத்தால் மொபைல் பாதிக்கப்படுமா? அப்படியே இருந்தாலும் மொபைல் வெடிக்கும் அளவுக்குச் செல்லுமா ? 



மொபைலில் வெப்பம் உருவாவது இயல்பு:




வெப்பம்



சாதாரணமாகவே ஒரு மொபைல் செயல்பாட்டில் இருக்கும் பொழுது வெப்பம் உருவாவது என்பது அனைத்து மொபைல்களுக்கும் பொதுவான ஒன்று. ஆனால், வெளிப்புறத்தில் வைத்துப் பயன்படுத்தும் பொழுது போனில் உருவாகும் வெப்பம் ஏதாவது ஒரு வழியில் வெளியேறிவிடும். எடுத்துக்காட்டாக கைகளில் வைத்துப்  பயன்படுத்தும் பொழுது வெப்பம் கைகளுக்குக் கடத்தப்பட்டு விடும். ஆனால், பேன்ட் பாக்கெட் போன்ற காற்றோட்டம் குறைவான இடங்களில் மொபைலை வைத்திருக்கும் பொழுது அங்கு வெப்பம் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் என்பது குறைவாகவே இருக்கும். பைக்கில் பயணம் செய்யும்போது பெரும்பாலானோர் மொபைலை பேன்ட் பாக்கெட்டில்தான் வைத்திருப்பார்கள். பைக்கில் செல்லும் போது தொடைப்பகுதியில் நேரடியாகவே வெயில்படும். அப்பொழுது வெயில் நேரடியாக மொபைல் மீது படாவிட்டாலும் துணியின் மேல் படும் பொழுது வெப்பம் அதற்குக் கீழே இருக்கும் மொபைலுக்குக் கடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அது போன்ற சமயங்களில் மொபைல் செயல்பாட்டில் இல்லையென்றாலும் வெளிப்புறத்திலிருந்து தொடர்ச்சியாக வரும் வெப்பத்தால் மொபைலின் வெப்பநிலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அப்படி உருவாகும் வெப்பம் உடலுக்குக் கடத்தப்பட்டுவிடும் என்றாலும் சுற்றுப்புற வெப்பநிலை அதிமாக இருக்கும் பொழுது மொபைல் அதிகமாகச்  சூடாவதை உணர முடிகிறது. பயணத்தின் போதுதான் இதுபோல நிலைமை ஏற்படும் என்று கூறிவிட முடியாது. ஒரு சிலர் மறந்துபோய்க் கூட நேரடியாக வெயில் படும் இடங்களில் மொபைலை வைத்து விடுவார்கள். அப்படிப்பட்ட சமயங்களிலும் வெப்பம் நேரடியாக மொபைலைத் தாக்கும் வாய்ப்புண்டு. 



 



வெப்பம்



அதிகப்படியான வெப்பம் நிச்சயம் மொபைலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்; அதிலும் முதலில் பாதிக்கப்படுவது பேட்டரிதான். மொபைலின் வெப்பநிலை 30°C-ஐ தாண்டும்பொழுது பேட்டரி நிச்சயம் பாதிக்கப்படும். அதிக வெப்பநிலையில் பேட்டரி அதன் இயல்பான செயல்திறனை இழக்கும். சார்ஜ் வேகமாக காலியாகும். வெப்பநிலை குறைந்தபிறகு பேட்டரியின் செயல்பாடு சீராகிவிடும். அதேநேரத்தில் இது போல தொடர்ச்சியாக வெப்பம் ஏற்படும் சூழ்நிலைகளில் மொபைல் இருந்தால் பேட்டரியின் செயல்திறன் பாதிக்கப்படும்.



சூரிய ஒளி நேரடியாகப் படுவதால் மொபைலின் டிஸ்ப்ளே பாதிக்கப்படும், சூரிய ஒளி சிறிது நேரம் பட்டால் டிஸ்ப்ளேவில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது; மாறாகத் தொடர்ச்சியாகப் படும்பொழுது டிஸ்ப்ளே நிச்சயம் பாதிக்கப்படும். இப்படிச் சிறிய அளவிலான பாதிப்புகள்தான் இருக்கும். அது மட்டுமன்றி வெயிலின் வெப்பத்தால் மொபைல் போன் வெடித்ததாக இதுவரை எந்தச் சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டதில்லை. மொபைலில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயான் பேட்டரிகள் 100 °C- வெப்பநிலையைத் தாண்டும்போதுதான் வெடிக்கும் நிலைக்குச் செல்லும். நமது சுற்றுப்புறத்தில் அவ்வளவு அதிக வெப்பநிலை உருவாவது இயல்பான சூழ்நிலைகளில் வாய்ப்பில்லை என்பதால் சூரியனின் வெப்பத்தால் மொபைல் வெடிப்பதற்கான சாத்தியங்கள் கிடையாது.



வெளியில் செல்லும்போது மொபைல் அதிகமாகச் சூடாவதைப் போல உணர்ந்தால் உடனே மொபைலை கையில் எடுத்து குளிர்விக்கலாம். நிழலான இடங்களுக்குக் கொண்டு சென்றால் மொபைலில் உருவான வெப்பம் தானாகவே குறைந்துவிடும். பயணமாக இருந்தாலும் சரி சாதாரண நேரமாக இருந்தாலும் சரி  மொபைலை பயன்படுத்தாத பொழுது டேட்டா மற்றும் ஜிபிஎஸ் போன்றவற்றை ஆப் செய்து விடலாம் அவற்றின் தேவை இருந்தால் மட்டும் ஆன் செய்யலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages