மிரட்டிய சாவித்ரி, நிறுத்தப்பட்ட என்டிஆர் ? - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 14, 2018

மிரட்டிய சாவித்ரி, நிறுத்தப்பட்ட என்டிஆர் ?

[ad_1]


மிரட்டிய சாவித்ரி, நிறுத்தப்பட்ட 'என்டிஆர்' ?



14 மே, 2018 - 16:51 IST






எழுத்தின் அளவு:






NTR-Movie-stopped?


தெலுங்குத் திரையுலகத்தில் தனிப் பெரும் நடிகையாக விளங்கியவர்களில் ஒருவர் நடிகை சாவித்ரி. அவரது வாழ்க்கை வரலாற்றுப் படமான 'மகாநதி' படத்தை அனைவரும் வியக்கும் வகையில் படமாக்கி கடந்த வாரம் வெளியிட்டார்கள். வசூல் ரீதியாகவும் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தை தெலுங்குத் திரையுலகத்தில் உள்ள பலரும் பாராட்டி வருகிறார்கள்.

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை எந்தவிதமான ஒளிவு மறைவும் இல்லாமல், கதாபாத்திரங்களுக்கேற்ப பொருத்தமான நட்சத்திரங்களைத் தேர்வு செய்து யதார்த்தமாய் கொடுத்திருக்கிறார்கள் எனப் பாராட்டு கிடைத்து வருகிறது.

'மகாநதி' படத்தை நடிகர் பாலகிருஷ்ணாவும் அவருடைய குடும்பத்தினருடன் பார்த்துள்ளார். சாவித்ரியின் கதையை பிரமாதமாகப் படமாக்கிய படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார்.

இதையடுத்து அவர் தயாரித்து, நடித்து வரும் அவருடைய அப்பா 'என்டிஆர்' வாழ்க்கை வரலாற்றுப் படமான 'என்டிஆர்' படத்தின் படப்பிடிப்பை தள்ளி வைத்துவிட்டார் என்கிறார்கள். 'மகாநதி' படம் அளவிற்கு 'என்டிஆர்' படத்தை எடுக்கவில்லை என்றால் அது அவருடைய அப்பாவுக்கு செய்யும் அவமரியாதை என நினைத்திருக்கிறார். படத்தின் இயக்குனர் தேஜா விலகிய நிலையில் அவரே படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகின.

'மகாநதி' படத்தில் உள்ள ஒவ்வொரு விஷயமும் கவனத்துடன் சொல்லப்பட்டுள்ளதால் அது போலவே தரமான படமாக 'என்டிஆர்' படம் உருவாக வேண்டும் என விரும்புகிறாராம். அதனால், படத்தை எந்த அவசரமும் இல்லாமல் பொறுமையாக எடுத்து வெளியிட அவர் முடிவு செய்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages