சன் ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே நடந்த நேற்றைய போட்டியில் ஜடேஜா பயமுறுத்திய தோனியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
ராயுடுவின் சிறப்பான சதத்தால் புனேவில் ஞாயிற்றுக்கிழமை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஹைதராபாத்துக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தனர். சன் ரைசர்ஸ் அணி 7-வது ஓவர் ஆடிக் கொண்டிருக்கும்போது ஹர்பஜன் வீசிய பந்தை ஷிகர் தவான் லெக் சைடில் அடித்துவிட்டு இரண்டு ரன்களை எடுக்கலாம் என்ற எண்ணத்தில் ஓடினார். ஆனால் தோனியோ விரைவாக ஓடிச் சென்று பந்தை எடுத்தார். அதனால் ஷிகர் தவான் இரண்டு ரன்கள் எடுக்கும் முயற்சியை கைவிட்டார்.
இதில் நகைச்சுவையான சம்பவம் என்னவென்றால் பந்தை விரைந்து எடுக்கச் சென்ற தோனி பந்தை எடுக்க வந்த ஜடேஜாவின் மீது வீசுவது போல் பயமுறுத்தினார். இதில் ஜடேஜா சற்று பயந்தே போவார். பின்னர் அங்கிருந்து தோனி சிரித்துக்கொண்டே சென்றுவிடுவார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. மேலும் இது குறித்து மீம்ஸ்களும் வலம் வந்தன.
முன்னதாக ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தி, கொண்டாடாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரவிந்திர ஜடேஜாவின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மிஸ் பண்ணிடாதீங்க. இதையும் படிங்க...
சுவாரஸ்யமில்லாத சன்ரைசர்ஸ் ஆட்டம்: ராயுடு சதத்தால் சிஎஸ்கே எளிதான வெற்றி
கோலியின் விக்கெட்டை வீழ்த்தியும் கொண்டாடாத ஜடேஜா : வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
[ad_2]
Source link
No comments:
Post a Comment