அர்னால்டுக்கு நேர்ந்த கொடுமையைப் பாருங்க..! | Arnold posts hilarious photo of himself - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, May 15, 2018

அர்னால்டுக்கு நேர்ந்த கொடுமையைப் பாருங்க..! | Arnold posts hilarious photo of himself

[ad_1]

ஹோட்டல் திறப்பு :

ஹோட்டல் திறப்பு :

அர்னால்டு கலிஃபோர்னியா கவர்னராக இருந்தபோது, அங்குள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றைத் திறந்து வைத்தார். அந்த ஹோட்டலின் முன் அர்னால்டின் ஆள் உயரச் சிலையை வைத்து கௌரவப்படுத்தியது ஹோட்டல் நிர்வாகம். அதோடு அர்னால்டு எப்போது வேண்டுமானலும் வந்து இலவசமாக இந்த ஓட்டலில் தங்கிக் கொள்ளலாம் என்று அறிவித்தது.

ஹோட்டலில் ரூம் இல்லை :

ஹோட்டலில் ரூம் இல்லை :

அர்னால்டின் கலிபோர்னியா கவர்னர் பதவி காலம் முடிந்தது. சினிமாவிலும் மார்க்கெட் போனது. சாதாரண குடிமகன் ஆனார். இந்த நிலையில் ஒரு நாள் அந்த ஹோட்டலுக்கு சென்று ரூம் கேட்டிருக்கிறார் அர்னால்ட். 'ரூம் அனைத்தும் புக் ஆகிவிட்டது. வேறு ஹோட்டல் பாருங்கள்' என்று கூறியிருக்கிறது நிர்வாம். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அர்னால்ட், அந்த ஹோட்டலின் முன் இருந்த தனது சிலையின் கீழேயே படுத்துக்கொண்டு அதை ஒரு போட்டோ எடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இப்படி எழுதியிருக்கிறார்.

அர்னால்டின் பதிவு :

அர்னால்டின் பதிவு :

'நாம் பதவியில் இருக்கும்போது மெச்சப்படுவோம், புகழப்படுவோம், நமக்கு உச்சபட்ச மரியாதை தரப்படும்' எப்போது நாம் பதவியையும், புகழையும் இழக்கிறோமோ அடுத்த நொடியே நாம் ஒதுக்கப்படுவோம், நமக்குத் தந்த சத்தியங்கள் காற்றில் பறக்கவிடப்படும். எந்தச் சத்தியங்களும், வாக்குறுதிகளும் உங்களுக்காக கொடுக்கப்பட்டது அல்ல அது உங்களை அலங்கரித்த பதவிக்குக் கொடுக்கப்பட்டது. உங்கள் புகழை, உங்கள் பதவியை, உங்கள் அதிகாரத்தை, உங்கள் அறிவை ஒரு போதும் நம்பாதீர்கள்' எனப் பதிவிட்டிருந்தார்.

வைரலான படம் :

வைரலான படம் :

அர்னால்டின் இந்தச் செய்தியும், அவரது புகைப்படமும் உலகம் முழுவதும் வைரலாகப் பரவியது. இங்கேதான் ஒரு ட்விஸ்ட்... அந்தப் புகைப்படம் கடந்த வருடம் வெளியானது. அந்தப் புகைப்படும் மீண்டும் இப்போது வைரலாகி வருகிறது.

உண்மை என்ன :

உண்மை என்ன :

அர்னால்டின் படம் உண்மைதான். அர்னால்ட் சிலை இருக்கும் ஓஹையா பகுதியில் அவர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. அதில் கலந்துகொண்டு நடித்த அர்னால்டு படப்பிடிப்பு இடைவெளியில் அந்த சிலைமுன் கண்ணயர்ந்திருக்கிறார். இதை ஒருவர் படம் எடுத்து அர்னால்டிடம் காட்டியிருக்கிறார்.

ஜாலி போஸ்ட் :

ஜாலி போஸ்ட் :

அதை அர்னால்ட் சும்மா விளையாட்டுக்காக தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு காலம் மாறிவிட்டது எனக் குறிப்பிட்டிருக்கிறார். அது இப்படிக் காட்டுத்தீயாக பரவி விட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் இன்றும் பரப்பப்பட்டு வருகிறது.

ஃபார்வர்டு மோகம் :

ஃபார்வர்டு மோகம் :

சமூக வலைதளங்களில் புழங்கும் பலரும் தங்களது டைம்லைனில் வரும் பல பொய்யான செய்திகளையும் உண்மையென நம்பி, காலம் நேரம் பார்க்காமல் பரப்பிக்கொண்டிருப்பார்கள். காஞ்சிபுரத்தில் ஒரு பள்ளிக்கூட வேன் ஒன்று குழந்தைகளுடன் கவிழ்ந்த செய்தியும், அந்தக் குழந்தைகளுக்கு ரத்தம் தேவை என்கிற தகவலும் பலகாலமாக நமக்கு ஃபார்வர்டாகிக் கொண்டு இருக்கின்றன. இதனால், உண்மை எது பொய் எது என அறிவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. இனியாவது திருந்துங்க ஆபிஸர்ஸ்..!



[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages