மயிலாய் வந்த ஐஸ்வர்யா ராய்
14 மே, 2018 - 19:29 IST
ஆஸ்கர் விழாவிற்கு பிறகு உலகளவில் பிரசித்தி பெற்றது பிரான்சில் நடக்கும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா. ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் பங்கேற்பது வழக்கம். அதன்படி இந்தாண்டும் 17-வது முறையாக பங்கேற்றார்.
விழாவின் முதல்நாளில் அளிக்கப்பட்ட சிவப்பு கம்பள வரவேற்பில், ஐஸ்வர்யா அணிந்து வந்த ஆடை அனைவரையும் கவர்ந்தது. நீல வண்ணத்தில் பட்டாம்பூச்சி வடிவில், நீண்ட தோகை உடைய மயிலாய் வந்து அனைவரையும் கவர்ந்தார். கூடவே அவரது மகள் ஆராத்யாவும், ஐஸ்வர்யா ராய் உடன் பங்கேற்றார்.
தனுஷ், தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, ஹூமா குரேஷி உள்ளிட்டவர்களும் இந்தாண்டு பங்கேற்றனர்.
[ad_2]
Source link
No comments:
Post a Comment