மின்னல் வேகத்தில் காலியாகும் ரெட்மி நோட்5 ப்ரோ... வேறு என்ன மொபைல் வாங்கலாம்? - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, May 24, 2018

மின்னல் வேகத்தில் காலியாகும் ரெட்மி நோட்5 ப்ரோ... வேறு என்ன மொபைல் வாங்கலாம்?

[ad_1]





குறைந்த விலையில் சிறப்பான வசதிகளோடு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் ஷியோமி விற்பனை என்று வரும்போது மொத்தமாக சொதப்பிவிடுகிறது. ஷியோமி அறிமுகப்படுத்தும் பெரும்பாலான பட்ஜெட் மற்றும் மிட் ரேஞ்ச் மொபைல்களில் இந்தப் பிரச்னை இருப்பது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. அந்த வரிசையில் தற்பொழுது இருப்பது ரெட்மி நோட் 5 ப்ரோ.



ரெட்மி நோட் 5 ப்ரோ மொபைல்




இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்த அடுத்த நொடி காணாமல் போய்விடுகிறது என்பது இதை வாங்க விரும்பும் பலரின் குற்றச்சாட்டு. வாராத்திற்கு ஒரு முறை விற்பனைக்கு வரும் இதை வாங்குவதற்கு தவம் கிடக்க வேண்டும். அப்படி இருந்தும் 12 மணிக்கு விற்பனை என்றால் 11.59 மணிக்கே 'out of stock' என்று தோன்றி வாங்கக் காத்திருப்பவர்களை கடுப்பேற்றும். சரி அடுத்த வாரம் வாங்கலாம் என்றால் அப்பொழுதும் அதே நிலைமைதான். இது போன்ற ஒரு பிரச்னை இருப்பதாக தொடர்ச்சியாக வந்த விமர்சனங்களால் ஆப்லைன் ஸ்டோர்களை இந்தியாவில் சில நகரங்களில் திறந்தது ஷியோமி. அதில் இன்னும் மோசம். இணையத்திலாவது எப்பொழுது வரும் என தெரியும் ஆப்லைன் ஸ்டோர்களில் எப்பொழுதுமே out of stock தான். இருபதாயிரம் ரூபாய்க்கு கீழே இருப்பதில் ரெட்மி நோட் 5 ப்ரோ  நல்ல மொபைல்தான் என்றாலும் அது கிடைக்கவில்லை என்றால் என்ன செய்ய முடியும். ரொம்ப நாளெல்லாம் வெயிட் பண்ண முடியாது பாஸ் என்பவர்களுக்கு ரெட்மி நோட் 5 ப்ரோவுக்கு மாற்றாக கிடைக்கும் எப்பொழுதுமே ஸ்டாக் இருக்கும் ஸ்மார்ட்போன்கள் இவை.



Honor 7X



Honor 7X ஸ்மார்ட்போன்



ரெட்மி ஸ்மார்ட்போன் கிடைக்காதவர்களின் அடுத்த சாய்ஸ் ஹுவாய் ஹானர் ஸ்மார்ட்போன்கள்தான். தோற்றத்திலும், வடிவமைப்பிலும் ரெட்மியோடு ஒப்பிடும் போது இந்த ஸ்மார்ட்போன் சிறந்ததாகவே இருக்கிறது. ரெட்மி நோட் 5 ப்ரோவில் இருப்பது போலவே 18:9 ஃபுல் வியூ டிஸ்ப்ளே, டூயல் கேமரா என முக்கியமான இரண்டு வசதிகளும் இதில் உண்டு. 5.93 இன்ச்  ஃபுல் வியூ டிஸ்ப்ளே ,டூயல் கேமரா,  4 ஜிபி ரேம் என ரெட்மி நோட் 5 ப்ரோவுக்கு இணையான வசதிகளைத் தருகிறது. 3340mAh பேட்டரி ரெட்மியை விட குறைவுதான் என்றாலும் கூட ஒரு நாள் உபயோகத்திற்கு போதுமானதாக இருக்கும். தற்போழுது வெளியாகும் ஸ்மார்ட்போன்களில் புதிதாக கொடுக்கப்பட்ட ஃபேஸ் அன்லாக் வசதியும் இதில் இருக்கிறது. ரெட்மியோடு ஒப்பிடும்போது விலையும் ஆயிரம் ரூபாய் குறைவுதான் 4 ஜிபி ரேம் மற்றும் 32 இன்டர்னல் மெமரி மாடல் 12,999 ரூபாய்க்கு கிடைக்கிறது.



Moto G5S Plus



Moto G5S Plus



15000 ரூபாய்க்கு கீழே டூயல் கேமரா மொபைல் விரும்புபவர்கள் இந்த ஸ்மார்ட்போனை கவனிக்க மறந்து விடுவார்கள். ரெட்மியோடு ஒப்பிடும்போது டிஸ்ப்ளேவும், பேட்டரியும்தான் இதில் இருக்கும் மைனஸ்கள்.  5.5 இன்ச் Full HD டிஸ்ப்ளே , 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டர்னல் மெமரி, டூயல் சிம், டூயல் கேமரா போன்றவை இதில் இருக்கும் வசதிகள். 3000mAH பேட்டரி சற்று குறைவாக தெரிந்தாலும் ஒரு நாளைக்கு தாக்குபிடித்துவிடும் அதோடு டர்போ சார்ஜிங் வசதி இருப்பதால் வேகமாக சார்ஜ் ஏற்றிக்கொள்ள முடியும். ரெட்மியைப் போல காத்திருக்க தேவையில்லை.  டிஸ்ப்ளேதானே அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் என்பவர்கள் தாரளமாக இந்த ஸ்மார்ட்போனை தேர்ந்தெடுக்கலாம். ரெட்மி நோட் 5 ப்ரோவின் விலையான 13,999 ரூபாய்க்கு  Moto G5S Plus ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.



 
 Honor 9 Lite



 Honor 9 Lite





5.65 இன்ச் 18:9 ஃபுல் வியூ டிஸ்ப்ளேவைக் கொண்டிருந்தாலும் விலை நோட் 5 ப்ரோவை விட ஆயிரம் ரூபாய் அதிகம்தான். பின்னர் எதற்காக ஆயிரம் ரூபாய் அதிகம் என்பவர்களுக்கு இதில் முன்புறம் இரண்டு பின்புறம் இரண்டு என மொத்தம் நான்கு கேமராக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு விஷயம் இதன் தோற்றம். நோட் 5 ப்ரோ போல இல்லாமல் ரிச் லுக்கில் தோற்றமளிக்கிறது. அறிமுகமான தொடக்கத்தில் 3 ஜிபி ரேம் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி வேரியன்ட்  10,999 ரூபாயாக்கு கிடைத்து வந்தது அது தற்பொழுது கிடைப்பதில்லை. ஆனால் 4 ஜிபி ரேம் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வேரியன்ட் 14,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. 



இதற்கிடையே ரெட்மி நோட் 5 ப்ரோவுக்கு கடும் போட்டியாக இருந்து வந்த Mi A1 ஸ்மார்ட்போனின் விற்பனையை நிறுத்தியிருக்கிறது ஷியோமி. Mi A1 விற்பனையில் இருந்தால்  ரெட்மி நோட் 5 ப்ரோவின் விற்பனை பாதிக்கப்படும் என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கிறது ஷியோமி. அதே வேளையில்  Mi A1 விற்பனை தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுளதாகவும் அது மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்றும் ஷியோமி தெரிவித்திருக்கிறது. Mi A1 ஸ்மார்ட்போனின் அடுத்த வரிசை மொபைலாக  Mi A2 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தலாம் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages