‘அங்காடித்தெரு’, ‘வெயில்’, ‘அரவான்’, ‘காவியத்தலைவன்’ படங்களை இயக்கிய வசந்தபாலன், அடுத்துஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்கத் தொடங்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் சில அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட அரங்கமைப்பில் படமாக்கப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக 25 நாட்கள் படமாக்கத் திட்டமிட்டு அதில் பெரும்பாலான பகுதிகளை படமாக்கி முடிக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி, நந்தனராம் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தில் ராதிகா முக்கிய கதாபாத்திரம் ஏற்கிறார். நடிப்புக்கு இடையே படத்துக்கான 3 பாடல்களை இசையமைத்து முடித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். விரைவில் இப்பாடல்களை ஒவ்வொன்றாக படமாக்கும் வேலையும் தொடங்க உள்ளது. படத்தின் கதாநாயகியான அபர்ணதி, ஆர்யாவுடன் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
[ad_2]
Source link
No comments:
Post a Comment