5/16/2018 12:53:45 PM
30 வயது கடந்த பிறகும் சில நடிகைகள் திருமணம் செய்துகொள்ளாமல் காலம் தாழ்த்திக்கொண்டிருக்கின்றனர். வந்தவரை லாபம் என்ற பாணியில் வரும் படங்களை ஒப்புக்கொண்டு கோடிகளை குவித்துக்கொண்டிருக்கின்றனர். ஆபாச படங்களில் நடித்து இணைய தளங்களில் பிரபலமானவர் சன்னி லியோன். ஒரு கட்டத்தில் தனது பாணியை மாற்றிக்கொண்டு படங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்தியில் கவர்ச்சி வேடங்களை ஏற்று நடித்தவர் தமிழிலும் வடகறி படத்தில் குத்து பாடலுக்கு நடனம் ஆடினார். தற்போது வீரமாதேவி என்ற படத்தில் போர்வீராங்கனையாக நடிக்கிறார். ஆபாச படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே சன்னி லியோனுக்கு திருமணம் ஆகிவிட்டது. டேனியல் வெபர் என்பவரை மணந்தார். ஆனாலும் இருவரும் குழந்தை பெறாமல் இருந்துவந்தனர். கடந்த வருடம் சன்னி லியோனுக்கு திடீரென அம்மாவாக வேண்டும் என்ற ஆசை வந்தது. குழந்தை பெற்றுக்கொண்டால் பட வாய்ப்புகள் பறிபோய்விடும் என்று எண்ணியவர் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து நிஷா என்ற குழந்தையை தத்தெடுத்தார். பின்னர் கடந்த ஆண்டு மீண்டும் இரட்டை குழந்தைகளை தத்தெடுத்தார். அவர்களுக்கு அஷ்ஹர், நோஹா என பெயரிட்டார்.
தற்போது கணவன், மனைவி, 3 குழந்தைகள் என சன்னி குடும்பம் பெரிதாகிவிட்டது. இந்த சூழலை அவர் மிகவும் நேசிக்கிறார். குழந்தைகளை அன்புகாட்டி வளர்த்துவருவதுடன் வெளியூர் பயணமென்றால் கையோடு மூன்று குழந்தைகளையும் அழைத்துச் செல்கிறார். சமீபத்தில் வெளியூர் சென்று திரும்பிய சன்னி, மும்பை விமான நிலையத்தில் 3 குழந்தைகளுடன் வந்த காட்சி அனைவரையும் கவர்ந்தது. சன்னி ஒரு குழந்தையையும் டேனியல் வெபர் மற்றொரு குழந்தையையும் துாக்கி வந்தனர். 3வது குழந்தையை பணியாள் ஒருவர் வைத்திருந்தார். இந்த காட்சி இணைய தளத்தில் வலம் வந்துகொண்டிருக்கிறது. இதுபற்றி சன்னி கூறும்போது,’நானோ, என் கணவரோ இப்படியொரு குடும்பம் எங்களுக்கு அமையும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இது எல்லாம் கடவுள்போட்ட திட்டம். 3 குழந்தைகள் என்பது அற்புதமான அனுபவம். தற்போது நாங்கள் முழுமையான குடும்பமாக மாறியிருக்கிறோம்’ என்றார்.
[ad_2]
Source link
No comments:
Post a Comment